சென்னையில் இன்று ரேசன் கார்டு குறைதீர் முகாம்
சென்னை, ஜூலை 11- சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் சனிக்கிழமை யன்று ரேசன் கார்டு குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: பொது விநியோக திட்டத்தின் பயன்களை குடும்ப அட்டைதாரர்கள் எளிதில் பெறும் வகை யில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் சென்னையை பொறுத்தவரை மண்டல அலுவலகங்களில் மக்கள் குறைதீர் முகாம், ஒவ்வொறு மாதமும் 2வது சனிக் கிழமை நடத்தப்படுகிறது. அதன்படி இந்த மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம், சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் 19 மண்டல உதவி ஆணை யாளர் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்தல் மற்றும் அங்கீகாரச்சான்று உள்ளிட்ட பொது விநியோக திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ள ப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோயில்களில் பணிகள் அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்
நெமிலி ,ஜூலை 11 – நெமிலி ஊராட்சி ஒன்றி யம், பள்ளூர் ஊராட்சியில் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் ரூ. 94.50 லட்சம் மதிப்பீட்டில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்குகேஸ்வரர் திருக் கோயில் திருப்பணிக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கோவில் பணிகளை தொடங்கி வைத்தார். பனப்பாக்கம் முதல் நிலை பேரூராட்சியில் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப் பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடம், பனப்பாக் கம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நபார்டு நிதி மேம்பாட்டு திட்டத்தின் கட்டப்பட்ட 2 வகுப்பறை கட்டடம் திறந்து வைக்கப் பட்டது. நெமிலி வட்டம், காவேரி ப்பாக்கம் பேரூராட்சியில் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் ரூ. 51.7 லட்சம் மதிப்பீட்டில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அபயவரதராஜப் பெரு மாள் திருக்கோயில் திருப் பணிக்கு, சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம், பெருங் காஞ்சியில் இந்து சமய அற நிலையத் துறையின் சார்பில் ரூ. 87.31 லட்சம் மதிப்பீட்டில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அகத்தீஸ்வரர் திருக்கோயில் பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா தலைமை தாங்கினார். நிகழ்ச்சிகளில் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம். முனி ரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சென்னையில் மாடுகள் தொல்லை அதிகரிப்பு
சென்னை,ஜூலை 11- சென்னையில் மாடுகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. 2023 ஆம் ஆண்டு அரசு புள்ளி விவரப்படி, தமிழ்நாட்டில் 499 மாடு சம்பந்தப்பட்ட சாலை விபத்துகள் நடந்துள் ளன. குறிப்பாக ஆர்.கே.மடம் சாலை, திரு வல்லிக்கேணி, கோயம்பேடு, ஜி.என்.செட்டி சாலை, பெல்ஸ் சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை போன்ற இடங்களில் மாடுகள் அதிகமாக சுற்றித் திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சில நேரங் களில் விபத்துகளும் நடக்கின்றன.
உயர் ரக கஞ்சா விற்ற திரைப்பட உதவி இயக்குநர் கைது
சென்னை, ஜூலை 11- சென்னை ஏழுகிணறு பெரியண்ணா தெருவில் ஒருகும்பல் உயர் ரக கஞ்சாவான ஓஜி கஞ்சா விற்பதாக, போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவுக்கு வந்த தகவலின் அடிப்படையில்அங்கு கண் காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வந்த 3 நபர்களிடமிருந்து 750 கிராம் ஓஜி கஞ்சா எனப்படும் உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தண்டையார்பேட்டை வஉசி நகரைச் சேர்ந்த திரைப்பட உதவி இயக்குநர் பிரேம்குமார் (32), விம்கோ நகரைச் சேர்ந்த ராஜன் (36), பிராட்வே பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் சந்தோஷ் (34) ஆகியோரை காலல்துறையினர் கைது செய்தனர்.
வேலூரில் பெண் காவலர்கள் 182 பேருக்கு பயிற்சி
வேலூர், ஜூலை 11- வேலூரில் பயிற்சி முடித்த 2ம் நிலை பெண் காவலர்கள் 182 பேருக்கு காவல் நிலையத்தில் 15 நாட்கள் பயிற்சி தொடங்கி யது. வேலூர் கோட்டையில் உள்ள காவல் பயிற்சி பள்ளி யில் 182, 2ம் நிலை பெண் போலீசாருக்கு 7 மாதம் பயிற்சி வழங்கப்பட்டது. அவர்களுக்கான பயிற்சி நிறைவு விழா கடந்த 8ம் தேதி நடந்தது. இதில் சிறப் பாக பயிற்சி முடித்த பெண் போலீசாருக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங் கப்பட்டது. இதைதொடர்ந்து பயிற்சி முடித்த 182, 2ம் நிலை பெண் போலீசாரும் தற்போது போலீஸ் நிலை யத்தில் தங்களது 15 நாள் பயிற்சியை தொடங்கி யுள்ளனர். அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஒரு போலீஸ் நிலையத் திற்கு 15 பேர் என 182 பேரும் 15 நாள் பயிற்சியில் ஈடுபடு கின்றனர். போலீஸ் நிலைய பணிகள் குறித்து அவர்க ளுக்கு வியாழனன்று பயிற்சி வழங்கப்பட்டது. இதைய டுத்து ஆயுதப்படையில் 15 நாட்கள் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சி முடிந்த தும் போலீஸ் நிலையத்தில் பணிபுரிய பணி நியமன ஆணை வழங்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரி வித்தனர்.