ராஜீவ் காந்தி பிறந்தநாள் உறுதிமொழி ஏற்பு
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் விழா புதுச்சேரி அரசு சார்பில் புதன்கிழமை (ஆக.20) அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, புதுச்சேரி தட்டாஞ்சாவடி ராஜீவ் காந்தி சதுக்கத்தில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நடைபெற்ற தீவிரவாதத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் டாக்டர் கைலாஷ் நாதன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன், துணை பேரவை தலைவர் ராஜவேலு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், சாய் சரவணன் குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.