tamilnadu

img

கிருஷ்ணகிரியில் முள்ளங்கி விலை கடும் வீழ்ச்சி

கிருஷ்ணகிரியில் முள்ளங்கி விலை கடும் வீழ்ச்சி

கிருஷ்ணகிரி, ஆக.25-  போச்சம்பள்ளி வட்டத்தில் கந்தம்பட்டி குள்ளம்பட்டி செல்லகுட்டப் பட்டி பகுதிகளில் 50 ஏக்க ருக்கும் மேற்பட்ட நிலத்தில் முள்ளங்கி பயிர் செய்துள்ளனர். இந்நிலையில் மழைக் காலமாக இருப்பதால் முள்ளங்கி விலை கடும் வீழ்ச்சி அடைந்து கிலோ 4 ரூபாய்க்கு வியாபாரிகள் கேட்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு முள்ளங்கி பிடுங்கும் கூலி கூட கிடைப்பதில்லை. கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்கின்றனர். இந்நிலையில் முள்ளங்கி பிடுங்கி விற்கப்படாமல் வேறு பயிர் செய்வதற்காக முள்ளங்கி விளைந்துள்ள வயலில் டிராக்டர்களை கொண்டு உழுது வருகின்றனர். இதுகுறித்து விவ சாயிகள் கூறுகையில், அரசு எங்கள் நட்டத்தை போக்கு வதற்கு கட்டுபடியான விலையை நிர்ணயித்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும். ஏற்பட்டுள்ள நட்டத்தை கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.