புதுச்சேரி காங்கிரஸ் அரசு தேர்தல் கால மக்கள் நலதிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மண்ணாடிப்பட்டு கொம்யூன்குழு சார்பில் மதகடிப்பட்டில் செயலாளர் அன்புமணி தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் பிரதேச செயற்குழு உறுப்பினர் பிரபுராஜ், கொம்யூன்குழு உறுப்பினர்கள் கலிவரதன், தட்சணாமூர்த்தி, விநாயகம், ராமமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.