tamilnadu

தென்னை நார் கொள்கை வெளியீடு

சென்னை, ஜன. 4- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறு வனங்கள் துறை சார்பில், தென்னை நார் சார்ந்த தொழில் நிறுவனங்கள் எதிர் கொள்ளும் சவால்கள் மற்றும் போட்டி களை உணர்ந்தும், தென்னை நார் சார்ந்த தொழில் நிறுவனங்களின் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்திட தயாரிக்கப்பட்டுள்ள “தென்னை நார் கொள்கை 2024”-ஐ வெளி யிட்டார்.

தென்னை நார் கொள்கையானது, தென்னை நார் தொழில் நிறுவனங்களின் தேவைகளை நிறைவேற்றுவது, அந்நிறு வனங்களின் வளர்ச்சிக்கு உறுதி செய்வது மற்றும் தொழிற் நிறுவன சங்கங்களின் கருத்துக்களை கேட்டறிந்து அதன்படி நட வடிக்கை மேற்கொண்டு இத்துறையின் வளர்ச்சியில் முதலீடு செய்த அனைத்து பங்கு தாரர்களையும் பயன்பெறச் செய்வது ஆகிய வற்றை உள்ளடக்கியது ஆகும். இக்கூட்டு அணுகுமுறையானது, இத்தொழில்துறை யின் தேவைகளை நிறைவேற்றுவது மற்றும் அதன் முன்னேற்ற இலக்கை அடை வதற்கான தீர்வுகளை வழங்குவதையும் உறுதி செய்கிறது.

உலகத் தரத்திலான மதிப்பு கூட்டப் பட்ட தென்னை நார் பொருட்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க, தென்னை நார் துகள் மற்றும் தென்னை நார் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கான அதிநவீன ஆய்வகம் நிறுவப்படும். தென்னை நார் தொழிலில் நிலையான, சுற்றுச்சூழல் நட்பு டன் கூடிய மதிப்பு கூட்டப்பட்ட நடை முறைகளை மேம்படுத்துவதற்கு தென்னை நார் கொள்கை முன்னுரிமை அளிக்கிறது. ஒற்றைச் சாளர முறை மற்றும் தொழில் முதலீட்டாளர்க்கான உகந்த சூழ்நிலை ஆகியவற்றின் மூலம் தென்னை நார் சார்ந்த தொழிலில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டு, தேசிய மற்றும் சர்வதேச வர்த்தக அமைப்புகளுடன் கூட்டாண்மைக்கான அடித்தளத்தை இந்தக் கொள்கை அமைக்கிறது.

இதில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.