tamilnadu

img

தமிழ்நாட்டில் பௌத்தம் ஆய்வு நூல் வெளியீடு

தமிழ்நாட்டில் பௌத்தம் ஆய்வு நூல் வெளியீடு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் உளுந்தூர்பேட்டை கிளை மாநாட்டில் இ.ஜெயபிரகாஷ் எழுதிய ‘தமிழ்நாட்டில் பௌத்தம்’ என்னும் ஆய்வு நூல் வெளியிடப்பட்டது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத் தலைவர் ஜி.ஆனந்தன் நூலை வெளியிட, பரிக்கல் சந்திரன், ஆசிரியர் அழகு லிங்கம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நூலாசிரியர் ஜெயபிரகாஷ் ஏற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் க.வேலாயுதம், கா.குமரன், ஆசிரியர் உஷா, செம்மொழி அறக்கட்டளை நிறுவனர் கா.பா.காந்தி, தமிழ்நாடு புத்த தம்ம சங்கத்தின் தலைவர் க.பஞ்சமுத்து, ஆசிரியர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.