திருவொற்றியூரில் சர்வீஸ் சாலை அமைக்ககாவிடில் ஜூலை 23இல் போராட்டம்!
சிபிஎம் அறிவிப்பு
சென்னை, ஜூலை 8- திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகர் முதல் முல்லை நகர் வரை சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும், சிக்னல் விளக்கு அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி சிபிஎம் பகுதிக்குழு சார்பில் ஜூலை 23இல் போராட்டம் நடை பெறும் என மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தி யாளர்களிடம் கூறுகையில், தேசிய நெடுஞ்சாலை மணலி விரைவு சாலையில் முல்லை நகர் முதல் சத்திய மூர்த்தி நகர் வரை 3 கி.மீ. தூரம் உள்ளது. முல்லை நகர், முருகப்பா நகர், ஜோதி நகர், டி.கே.எஸ் நகர், சத்தியமூர்த்தி நகர் என 5 பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. சென்னை துறைமுகம் முதல் பஞ்சட்டி வரை அமைக்கப்பட்டிருக்கும் சாலையில் துறைமுகம் முதல் பாரத் நகர் வரை பராமரிப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது. பஞ்சட்டி முதல் பக்கிங்காம் கால்வாய் வரை பராமரிப்பு சாலை அமைக்கப் பட்டுள்ளது. ஆனால் சத்தியமூர்த்தி நகர் முதல் முல்லை நகர் வரை பராமரிப்பு சாலை அமைக்கப்படவில்லை. கடற்கரை சாலை சந்திப்புகளில் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டார் குப்பம், உரத்தொழிற்சாலை போன்ற சந்திப்புகளில் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் முல்லை நகர், ஜோதி நகர், சத்திய மூர்த்தி நகர் சந்திப்புகளில் சிக்னல் அமைக்கப்படவில்லை. இதனால் இந்த சாலையில் எதிர் திசையில் செல்வதும், சாலையை ஆங்காங்கே கடப்பதும் தவிர்க்க முடியாத நிலையாக உள்ளது. சிக்னல் அமைத்து, போக்கு வரத்து காவலர்களை நிறுத்தி போக்கு வரத்தை முறைப்படுத்த வேண்டிய போக்குவரத்து காவல்துறை, எதிர் திசையில் செல்பவர்களிடம் அபராதம் விதித்து வசூல் செய்வதில் கவனம் செலுத்துகிறது. தற்போது மையத் தடுப்புச் சுவர் இடைவெளி இன்றி கட்டப்பட்டு வந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்தால் தற்போது டிகேஎஸ் நகர், முருகப்பா நகரில் பாதசாரிகள் கடக்கும் வகையில் இடைவெளி ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் ஜோதி நகரில் இரு சக்கர வாகனம், ஆட்டோக்கள் சாலையை கடக்க இடைவெளி ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் சிக்னல் விளக்கு இல்லாததால் விபத்துகள் தொடர்கின்றன. எனவே, முல்லை நகர், ஜோதி நகர், சத்தியமூர்த்தி நகர் பகுதிகளில் சிக்னல் விளக்கு அமைத்து, போக்கு வரத்து காவலர்களை நிறுத்தி போக்கு வரத்தை முறைப்படுத்த வேண்டும். தேசிய நெடுஞ்சாலைத் துறை சத்திய மூர்த்தி நகர் முதல் முல்லை நகர் வரை இருபக்கமும் உடனடியாக பரா மரிப்பு சாலை அமைக்க வேண்டும் என சிபிஎம் கடந்த 2 ஆண்டுகளாக போராடி வருகிறது. முதலமைச்சர், மாநகராட்சி மேயர், வடசென்னை மக்க ளவை உறுப்பினர், தேசிய நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து காவல் துணை ஆணையர் என அனைவருக்கும் மனு அளிக்கப் பட்டுள்ளது. எனவே உடனடியாக மேற்சொன்ன கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் வரும் ஜூலை 23 அன்று முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.