தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம், ஆக. 2- தூத்துக்குடி வாலிபர் படுகொலை சம்பவத்தை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் விழுப்புரத்தில் சனிக்கிழமை (ஆக.2) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ் பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்டச் செய லாளர் சி.அறிவழகன் கலந்து கொண்டு தூத்துக்குடியில் இளைஞர் கவின் படு கொலையை கண்டித்தும், தமிழ்நாட்டில் மீண்டும் மீண்டும் அரங்கேறும் சாதி ஆணவ படுகொலைகள் இனி வருங்காலத்தில் நடக்காமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி பேசினார். இதில் மாவட்ட பொரு ளாளர் தேவநாதன், வட்டத் தலைவர் மு.ஜீவா னந்தம், வட்டச் செயலாளர் உ. மதன்ராஜ், வட்ட பொருளாளர் எஸ்.குணா உட்பட ஏராளமானோர் கலந்து கண்டனர்.