tamilnadu

img

பட்டியலின மக்களுக்கு ‘இ ’பட்டா வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

பட்டியலின மக்களுக்கு ‘இ ’பட்டா வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி, செப்.30- தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தினத்தையொட்டி, நில உரிமை -குடிமனை உரிமை கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் (செப். 30) செவ்வாயன்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் வி.மாரியப்பன் தலைமையில் கள்ளக்குறிச்சியில் நடை பெற்றது. தமிழகத்தில் குடிமனை பட்டா இல்லாத சுமார் 40 லட்சம் பேர் வசிக்கின்றனர்,அரசின் பல்வேறு புறம்போக்கு இடங்களில் குடி யிருந்து வரும் மக்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க சிறப்பு திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும். மாநிலம் முழுவதும் சுமார் 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்டு மீண்டும் பட்டியல் சமூக மக்களிடம் வழங்க வேண்டும்.1963 -இனாம் ஒழிப்பு மற்றும் ரயத்துவாரி சட்டத்தின்படி பட்டியல் செய்யப்பட்டுள்ள நிலங்களை கண்டறிந்து உணவடை செய்யும் விவசாயிகளுக்கே பட்டா வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள சுமார் 70 லட்சம் ஏக்கர் அரசு புறம்போக்கு தரிசு நிலங்களை நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கும்,விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதி திராவிடர் நலத்துறை மூலம் வழங்கப் பட்ட வீட்டுமனை பட்டாவை கிராம வரு வாய் கணக்கில் சேர்த்து இபட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் டி.ஏழுமலை,அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் அ.பா.பெரியசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.வி.ஸ்டாலின்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தின் முடிவில், பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பட்டா கேட்டு மாவட்ட வருவாய் அலு வலரிடம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் கொடுத்தனர்.  இதனை பெற்றுக் கொண்ட அலுவலர் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.