புதுச்சேரி தேங்காய்திட்டு புதுநகரில் குடிநீர் கேட்டு முற்றுகை போராட்டம்
புதுச்சேரி, செப்.1 - புதுச்சேரி மாநிலம், தேங்காய்திட்டு புது நகரில் சுத்தமான குடிநீர் வழங்கக் கோரி பாதிக்கப்பட்ட மக்களுடன் அசுத்தமான குடி நீரை கேனில் எடுத்துக்கொண்டு உப்பளம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் அதி காரிகளை முற்றுகையிட்டு சிபிஎம் நகர கமிட்டி செயலாளர் ஜோதிபாசு தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சீனுவாசன், மாநிலக்குழு உறுப்பினர் மதிவாணன், நகர கமிட்டி உறுப்பினர் வீர மணிகண்டன் மற்றும் அப்பகுதி மக்கள் திரளாகப் பங்கேற்றனர். இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை குடிநீர் வழங்கல் பிரிவு அதிகாரி சம்பத், நேரடியாக பாதிக்கப்பட்ட தேங்காய்திட்டு பகுதிக்குச் சென்று குடிநீரை ஆய்வு செய்தார். அசுத்த மான நீரை யாரும் பருகவேண்டாம் என்றும், அதுவரை அருகில் உள்ள சுதான நகரில் இருந்து குடிநீர் வினி யோகம் செய்யப்படும் என்றும் சிபிஎம் தலைவர்களிடம் உறுதியளித்தார். அதி காரியின் உறுதியை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது.