தஞ்சாவூர், ஆக. 8- பீகாரில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் என்ற பெயரில் நடைபெறும் மோசடி, லட்சக்கணக்கானோரை வாக்குரிமையற்றவர்களாக மாற்றி, என்.ஆர்.சியை அமல்படுத்த துடிக்கும், ஒன்றிய பாஜக அரசையும், அதற்கு துணை போகும் தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாவட்டக்குழு சார்பில், தஞ்சாவூர் தலைமைத் தபால் நிலையம் முன்பு மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயற்குழு உறு ப்பினர்கள் ஆர்.மனோகரன், சி.ஜெயபால், பி.செந்தில்குமார், என்.வி.கண்ணன், என்.சுரேஷ் குமார், கே.அருளரசன், ஆர்.கலைச்செல்வி, என்.சரவணன், கே.அபிமன்னன், எஸ்.செல்வராஜ், மூத்த தலைவர் என்.சீனிவாசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் என்.குருசாமி, எஸ்.கோவிந்தராஜ், ஏ.ராஜா, ஆர்.பிரதீப் ராஜ்குமார், ஏ.அருணாதேவி, பாபநாசம் ஒன்றியச் செயலாளர் டி.முருகேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு சார்பில், கரூர் மாவட்ட தலைமை தபால் அலுவலகம் முன்பு நடைபெற்றது. கண்டன ஆர்ப்பா ட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.ராஜு, கே.சக்திவேல், சி.முருகேசன், சி.ஆர்.ராஜாமுகமது, மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே. கந்தசாமி, ஜி.தர்மலிங்கம், எம்சுப்பிரமணியன், கரூர் மாநகரச் செயலாளர் எம்.தண்டபாணி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.