tamilnadu

மருத்துவ சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு செப். 16 இல் முற்றுகை; வியாபாரிகள் கடையடைப்பு

மருத்துவ சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு செப். 16 இல் முற்றுகை; வியாபாரிகள் கடையடைப்பு

மானாமதுரை, செப்.13- மானாமதுரை சிப்காட் தொழில் வளாகத்தில் 13 மாவட்டங்களில் சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவு களை சுத்திகரிப்பு என்ற பெயரில் எரியூட்டப்பட உள்ளது.  இதனால் வெளியேற்றப்படும் நச்சுப் புகையால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படும். ரசா யனம் கலந்த கழிவுநீரால் குடிநீர் ஆதாரங்கள் மாசுபடும்.  நீர் நிலைகள் மாசுபட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் சீர்குலையும். சிப்காட் வளாகத்தை சுற்றியுள்ள மானாமதுரை மற்றும்  சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுகாதார சீர்கேடு  ஏற்பட்டு வாழ்வதற்கு தகுதியற்ற பகுதியாக மாறிவிடும் அபாயம் உள்ளது. விருதுநகர் மாவட்டம் ஏ.முக்குளம் கிராமத்தில் இம்மாதிரியான ஆலையில் வெளியேற்றிய நச்சுக் காற்றால் மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சுவாசக் கோளாறு, நுரையீரல் பாதிப்பு, பெண் கருச் சிதைவு, சிறுநீரக பாதிப்பு மற்றும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலை யில் அந்த பகுதி மக்களின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு  அந்த ஆலை மூடப்பட்டது. ஏ.முக்குளம் பகுதி மக்களின் நிலையில் கருத்தில் கொண்டு மானாமதுரை பகுதி மக்களின் நலனுக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க  நமது எதிர்ப்பை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். நமது உடல் நலத்தையும், உயிருக்கு ஆபத்தையும் விளைவிக்கும் நச்சு ஆலையின் அனுமதியை ரத்து செய்யக்கோரி ஓரணியில் திரண்டு செப்டம்பர் 16ஆம் தேதி முற்றுகை போராட்ட மும் கடை அடைப்பும் நடைபெற உள்ளது. போராட்டத்தில்  வழக்கறிஞர்கள் சங்கம், ஹோட்டல் பேக்கரி உரிமை யாளர்கள் நலச்சங்கம், மானாமதுரை விநியோ கஸ்தர்கள் சங்கம், திருமுருகன் இருசக்கர வாகன பழுது  பார்ப்போர் நலச்சங்கம், பழைய பேருந்து நிலைய காய்கறி, பழங்கள், பூ வியாபாரிகள் சங்கம், புதிய  பேருந்து நிலைய காய்கறி, பழங்கள், பூ வியாபாரிகள் சங்கம், அனைத்து ஆட்டோ சங்கங்கள், அனைத்திந்திய வாகன ஓட்டுநர்கள் பேரவை, மருந்து வணிகர்கள் சங்கம், எலக்ட்ரிசியன் மற்றும் பிளம்பிங் வேலை பார்ப்போர் நலச்சங்கம், மருத்துவர் நலச்சங்கம், பந்தல்  ஒலி ஒளி அமைப்பாளர் நலச்சங்கம் ஆகிய அமைப்பு கள் போராட்டத்தில் பங்கேற்க இருப்பதாக அறி வித்துள்ளன.