tamilnadu

img

அதிமுக முன்னாள் அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அதிமுக முன்னாள் அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் பெண்களை இழிவாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கே.தமிழ்செல்வி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் எஸ்.கீதா, மாநில துணைச் செயலாளர் வி.மேரி ஆகியோர் பேசினர். மாவட்டச் செயலாளர் பா.இலக்கியபாரதி, எஸ்.சித்ரா, பொருளாளர் ஆர்.பிரேமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.