tamilnadu

img

பால் விற்பனை நிர்ப்பந்தத்தை கைவிட உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை

பால் விற்பனை நிர்ப்பந்தத்தை கைவிட  உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை

திருவண்ணாமலை, செப்.24- ஆவின் பால் நிர்வாகம் உற்பத்தியாளர்களிடம் விற்பனை நிர்ப்பந்தம் செய்வதை கைவிட வேண்டும் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆவின் கூட்டுறவு நிறு வனத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு முறையாக பணம் செலுத்தப்படாமல் உள்ளது. அரசு நிர்ணயம் செய்த விலை கொடுக்கப்படுவதில்லை. தமிழக அரசு அறிவித்துள்ள மூன்று ரூபாய் லிட்டர் ஒன்றுக்கு ஊக்கத் தொகையும் முழுமை யாக கிடைக்கவில்லை. ஆனால், தீபாவளி பண்டிகை முன்னிட்டு பால் உற்பத்தியாளர்களுக்கு பால்கோவா, ஸ்வீட் இனிப்பு வகைகள் வழங்குவதாகவும் உடனடியாக ஆரம்ப சங்க செயலாளர்கள் (இண்டன்) ஆர்டர் செய்ய வேண்டும் என்று ஆவின் நிர்வாகம் வற்புறுத்துகிறது. வற்புறுத்தி ஆர்டர் பெற்று தரம் இல்லாத பால்கோவா இனிப்பு வகைகள் தயார் செய்து விருப்பமில்லாத பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று திரு வண்ணாமலை மாவட்ட ஆவின் நிர்வாகம் பணியாளர்களை துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. இது முற்றிலும் கைவிடப்பட வேண்டும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட அமைப்பாளர் டி.கே.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார். விருப்பமுள்ள பால் உற்பத்தி யாளர்களுக்கு மட்டுமே தீபாவளி இனிப்பு வகைகளை வழங்கலாம் என்றும் மேலும் கூடுதலாக சிறப்பு இனிப்பு விற்பனை நிலையங்களை அரசு அலுவலகங்களில், ஆவின் பால் கிளை கடைகளில் துவக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.