tamilnadu

img

மின்சாரம் தாக்கி தனியார்  நிறுவன ஊழியர் பலி

மின்சாரம் தாக்கி தனியார்  நிறுவன ஊழியர் பலி

சென்னை, ஆக. 12- செம்பாக்கம் வேம்புலி நகர் ஏரிக்கரை சாலை ராமமூர்த்தி 2ஆவது தெருவில் வசித்தவர் எஸ்.ஆர்.அஸ்வின் (35). இவர் சிங்கபெருமாள் கோயில் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சோனியா (31). இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர் கடந்த 10ஆம் தேதி இரவு சுமார் 9.30 மணியளவில் காமராஜபுரம் பிரதான சாலை பவநந்தியார் தெருவில் உள்ள ஒரு கடைக்கு சென்ற போது  அங்கிருந்த மின் கம்பத்தின் மீதிருந்த ஒயர் மீது அவர் கை பட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.  இதுகுறித்த சோனியா அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.