tamilnadu

குடியரசுத்தலைவர் வருகை ஆக. 2, 3 டிரோன் பறக்கத் தடை!

குடியரசுத்தலைவர் வருகை  ஆக. 2, 3 டிரோன் பறக்கத் தடை!

சென்னை, ஆக. 29-  அரசு முறை பயணமாக, குடியரசு தலைவர் சென்னை வருவதை முன்னிட்டு 2, 3 ஆகிய இரு தேதிகளிலும் சென்னையில் டிரோன் பறக்க தடை விதித்து காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வரும் 2 மற்றும் 3-ம் தேதிகளில் அரசு முறை பயணமாக சென்னை வருகை தர உள்ளார். குறிப்பாக 2-ம் தேதி மதியம் நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர், 3-ம் தேதி விமானம் மூலம் சென்னையிலிருந்து திருச்சிக்கு புறப்படுகிறார். முன்னதாக 2-ம் தேதி இரவு கிண்டியில் உள்ள ராஜ் பவனில் தங்க உள்ளார். இதை யடுத்து சென்னையில் பலத்த பாது காப்பு ஏற்பாடுகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளான, சென்னை விமான நிலையம், சென்னை வர்த்தக மையம் (நந்தம்பாக்கம்), ராஜ் பவன் மற்றும் குடியரசு தலைவரின் வாகனம் செல்லும் வழித்தடங்கள் சிவப்பு மண்டல மாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பகுதிகளில் 2 மற்றும் 3 ஆகிய இரு தினங்கள் டிரோன் கேமராக்கள் மற்றும் எந்தவிதமான பறக்கும் பொருட்கள் பறக்கவிட தடை விதித்து காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தலைவர் தோழர் ஆர்.நல்லகண்ணு உடல் நிலை குறித்து சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஜி.ராம கிருஷ்ணன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று சிபிஐ மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன் மற்றும் ஆர்.நல்லகண்ணு மகள் டாக்டர் ஆண்டாள் ஆகியோரிடம் விவரம் கேட்டறிந்தனர்.