tamilnadu

img

அரசியல் நையாண்டி :சந்தேகம் சாமிக்கண்ணு

செய்தி :- இந்திய கிரிக்கெட் வாரிய விதிமுறைகளில் திருத்தம் செய்ய திட்டம்.
ச.சா - அமித்ஷாவோட வாரிசு பொறுப்பேற்றுக்காருல்ல.. பதவிக்காலத்த நீட்டிக்கப் போறாங்களாம்..!!

தமிழக அமைச்சர் மணியன் :- கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு குடிமனைப் பட்டாக்கள் வழங்க நடவடிக்கை.
ச.சா - சாதாரண மக்கள விரட்டிட்டு, பெரிய அளவுல ஆக்கிரமிச்சவங்களுக்கு குடுத்துற மாட்டீங்களே..??

செய்தி :- துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு அமெரிக்காவில் தங்க தமிழ் மகன் விருது.
ச.சா - முதலமைச்சர் எடப்பாடி என்ன நினைக்குறாரோ..??

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் :- தமிழகத் திட்டங்கள் பற்றிப் பிரதமரிடம் பேசினேன்.
ச.சா - பாஜகவுல சேரப் போறதா செய்தி வருதே..??