tamilnadu

img

மறைந்த தலைவர்களை இழிப்பதும் பழிப்பதும் ஏற்க முடியாது...

சென்னை, ஏப்.3- கடந்த மார்ச் 29 அன்று,  தனது கட்சியின் இராமநாத புரம் வேட்பாளரை ஆத ரித்துப் பேசிய சீமான், திரு டன் கதையைச் சொல்லி, முன்னாள் முதல்வர் கரு ணாநிதி, முதல்வர் ஸ்டா லின், அவரது மகன் உதய நிதி ஸ்டாலின் குறித்து தரக்  குறைவான வார்த்தைகளில் பேசினார்.

இதற்கு திமுகவினரிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. சீமானின் பேச்சைக் கண்டித்து பேராசிரி யர் சுப. வீரபாண்டியன் வீடியோ வெளியிட்டி ருந்தார்.  இந்நிலையில், முன்னாள் முதல்வர் கருணா நிதியின் நண்பரும், கவிஞருமான வைரமுத்து வும், தனது ‘எக்ஸ்’ தளத்தில் இந்த விவகாரம் குறித்து பதிவிட்டுள்ளார்.  

அதில், ‘ஜப்பானில் நிலநடுக்கமும், இந்தோ னேசியாவில் எரிமலை வெடிப்பும், தேர்தல் மேடை களில் இழிமொழிகளும் அபூர்வமல்ல. ஆனால்,  மறைந்த தலைவர்களை இழிப்பதும் பழிப்பதும் ஏற்கத்தக்கவையல்ல. சிறுகூட்டம் ரசிக்கும்; பெருங்கூட்டம் வெறுக்கும். மேடை நாகரிகமும் உள்ளிட்டதே தமிழர் பண்பாடு’ என்று மறைமுகமாக சீமானைச் சாடியுள்ளார்.