விவசாய கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாய விளைப் பொருட்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் திங்களன்று (ஆக.5) மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மாவட்டத் தலைவர் ஜி.சம்பத், மாவட்ட துணைத் தலைவர் பி.ரவி, சென்னை புறநகர் மாவட்ட நிர்வாகிகள் முருகன், சி.சுந்தர்ராஜ், மாதா.பால்ராஜ், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.