tamilnadu

img

ஓய்வூதிய விதிகள் சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் ஓய்வூதியர்கள் மாநாடு வலியுறுத்தல்

ஓய்வூதிய விதிகள் சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்

ஓய்வூதியர்கள் மாநாடு வலியுறுத்தல்

சென்னை, ஆக. 27 - ஓய்வூதிய விதிகள் சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. சம்பள ஆணையத்தின் பரிந்துரைகளை அரசு அமல்படுத்தும்போது, அதன் பலன் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் கிடைத்து வந்தது. இதனை மாற்றும் வகையில் மத்திய அரசு ஊழியர் ஓய்வூதிய விதிகள்- 1972ல் ஒன்றிய அரசு திருத்தம் கொண்டு வந்தது. இதனை எதிர்த்து 1982ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அப்போதைய உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ஒய்.வி.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ஓய்வூதியர்களில் பாகுபாடு காட்டக் கூடாது என்று தீர்ப்பளித்தது. நவீன தாராளமயக் கொள்கையை அமல்படுத்தி வரும் ஒன்றிய அரசு கடந்த மார்ச் மாதம் நிதி மசோதா வாயி லாக, ஓய்வூதிய விதிகளில் திருத்தம் செய்துள்ளது. அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்யும் வகை யில் அந்த திருத்தம் உள்ளது. இதன்படி 8வது சம்பள ஆணையத்தின் பரிந்துரை பலன்கள் பழைய ஓய்வூ தியர்களுக்கு கிடைக்காது. பரிந்துரை அமலாகும் காலத்திற்கு பிறகு ஓய்வு பெறுகிறவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இதனால் இனி ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் உயராது. மேலும், பொதுத்துறை, மாநில அரசு களும் இந்த திருத்தத்தை பின்பற்றும் அபாயம் உள்ளது. இதனை எதிர்த்து ஓய்வூதியர் அமைப்புகள் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுதுள்ளன. இந்நிலையில், ஓய்வூதியர்களுக்கு விரோத பிரிவுகளை நீக்கக் கோரி செவ்வா யன்று (ஆக.26) ராஜா அண்ணாமலை மன்றத்தில் சிறப்பு மாநாடு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய தலைவர்கள், சட்டத் திருத்தத்தை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும். 8வது ஊதியக்குழு அமைத்து, அதற்கான விதிகளை உரு வாக்க வேண்டும் என்றனர். மாநாட்டிற்கு பி.மோகன் (ஏஐபிஆர்பிஏ) தலைமை வகித்தார். சி.கே. நரசிம்மன் (ஏஐபிடிபிஏ) வரவேற்றார். தீர்மானங்களை என்.சி.சி.பி.ஏ மாபொதுச்செயலர் கே. ராக வேந்திரன் முன்மொழிந்தார்.  பல்வேறு ஓய்வூதியர் அமைப்புகளின் தலைவர்களும் உரையாற்றினர். நூர்அகமது (ஏஐஎப்பிஏ) நன்றி கூறினார்.