tamilnadu

img

தமிழ்நாட்டில் மீண்டும் உச்சபட்ச மின் நுகர்வு

தமிழ்நாட்டில் நேற்று அதிகபட்சமாக 20830 மெகாவாட் மின்சாரம் நுகர்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மின்நுகர்வோர் 2.67 கோடி பேர் உள்ளனர். தினமும் மின் தேவை சராசரியாக 15,000 மெகாவாட் ஆகவும், இதில், விவசாயத்தின் பங்கு 2,500 மெகாவாட் ஆகவும் உள்ளது. இது கோடை காலத்தில் 16,000 மெகாவாட் ஆக அதிகரித்தும், குளிர் காலத்தில் 12,000 மெகாவாட் ஆகக் குறைந்தும் காணப்படும்.

தற்போது கோடைகாலம் தொடங்கிவிட்டதால் மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நிகழாண்டு முன்னெப்போதும் இல்லாத அளவாக மார்ச் 16-இல் 18,053 மெகாவாட், அந்த வகையில் மின் தேவை அதிகரித்து தமிழ்நாட்டில் வியாழக்கிழமை அதிகபட்சமாக 20830 மெகாவாட் மின்நுகர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மின் உற்பத்திக் கழகம் எக்ஸ் தளப் பதிவில், வெப்ப அலையின் ஊடே 02.05.2024 அன்று மாநிலத்தின் மின் தேவை 20830 மெகாவாட்(15.00-15.30 மணி) என புதிய உச்சத்தை எட்டியது.இதற்கு முந்தைய அதிகபட்ச மின் தேவை 20701 மெகாவாட்(30.04.24) ஆகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;