கைத்தறி நெசவாளர்களுக்கு மிகை ஊதியம், ஈவுத்தொகை வழங்கல்
ஈரோடு, அக்.14- சென்னிமலை பகுதியைச் சேர்ந்த கைத்தறி நெசவா ளர்களுக்கு மிகை ஊதியம் மற்றும் ஈவுத்தொகையை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். ஈரோடு மாவட்டம், சென்னிமலை, பசுவப்பட்டி பிரிவு, அம்மன் காட்டேஜ் மண்டபத்தில் திங்களன்று, சென்னி மலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 15 கைத்தறி நெச வாளர் கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்த 3802 உறுப்பி னர்களுக்கு ரூ.4.99 கோடி மதிப்பீட்டில் மிகை ஊதியம் மற்றும் ஈவுத்தொகையினை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கி னார். இதன்பின் அவர் பேசுகையில், நெசவுத்தொழில் அழியாமல் பாதுகாப்பதிலும் பல்வேறு நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, மின்சா ரத்தில் சலுகை, அடிப்படை கூலி மற்றும் ஈவுத்தொகை யில் 10 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது. சென்னி மலை பகுதியில் உள்ள 26 கைத்தறி நெசவாளர் கூட்டு றவு சங்கங்களில் 8647 உறுப்பினர்கள் உள்ளனர். மேற்படி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் 2024-2025 ஆம் ஆண்டில் ரூ.9920.10 லட்சம் அளவிற்கு ஜவுளிகள் விற்பனையில் நிகர லாபமாக ரூ.652.22 லட்சம் ஈட்டியுள்ளது. இதில் 15 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தை சார்ந்த 3802 உறுப்பினர்களுக்கு ரூ.4.79 கோடி மதிப்பீட்டில் மிகை ஊதியம் (Bonus) மற்றும் ரூ.20.11 லட்சம் மதிப்பீட்டில் பங்கு ஈவுத்தொகை யாக என மொத்தம் ரூ.4.99 கோடி மதிப்பீட்டிலான தொகை வழங்கப்பட்டுள்ளது, என்றார். இதைத்தொடர்ந்து, எக்கட்டாம்பாளையம், மேட்டூர் ஏரிக்கரையில் பனை மர விதைகள் நடும் திட்டத்தின் கீழ், 1800 பனை விதைகள் நடும் பணியினை அமைச்சர் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி, பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி, திருப்பூர் மாந கராட்சி 4 ஆம் மண்டல குழுத்தலைவர் இல.பத்மநா பன், உதவி இயக்குநர் (கைத்தறி) சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
