tamilnadu

img

செஞ்சி பகுதியில் பட்டா இல்லாதோருக்கு பட்டா  மாதர் சங்கம் வலியுறுத்தல்

செஞ்சி பகுதியில் பட்டா இல்லாதோருக்கு பட்டா  மாதர் சங்கம் வலியுறுத்தல்

விழுப்புரம், ஆக. 11- விழுப்புரம் மாவட்டம்,செஞ்சியில் நடைபெற்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் வட்ட மாநாட்டை மாவட்டச் செயலாளர் இலக்கிய பாரதி துவக்கி வைத்தார். சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் எஸ். கீதா நிறைவு செய்து உரையாற்றினார். இந்த மாநாட்டில் 17 பேர் கொண்ட ஒன்றிய குழுவுக்கு தலைவராக சுசிலா, செயலாளராக பிரியா, பொருளாளராக சாந்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். வீட்டுமனை பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.