சிபிஎம் வலியுறுத்தல்
சிதம்பரம், மே 29- பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள தனி யார் அனல்மின் நிலையம் தனது சிஎஸ்ஆர் நிதியில் இருந்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமை யில் மாவட்டக் குழு உறுப்பினர்கள் கற்ப னைச் செல்வம், ஜெயசீலன், கரிகுப்பம் கிளை செயலாளர் பரமானந்தம் ஆகியோர் சிதம்ப ரம் சார் ஆட்சியர் விசுமகாஜனை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம் கரிகுப்பம் கிரா மத்தில் ஐ.எல். & எப்.எஸ் என்ற தனியார் அனல்மின் நிலையம் இங்கு பயன்பாட்டி லிருந்த ஆயிரக்கணக்கன ஏக்கர் விலை நிலங்களை வாங்கிதான் துவங்கப்பட்டது.
இப்பகுதி மக்களுக்கு இந்த நிறுவனம் தனது கார்ப்ரேட் சமூக பொறுப்பு நிதி மூலம் பேரிடர் காலங்களில் உதவுவது அவசிய மானது. பொதுவாகவே இந்நிறுவனம் அப்பகு தியை சுற்றியுள்ள மக்களுக்கு கார்ப்ரேட் சமூக பொறுப்பு நிதி மூலம் செய்வதாக ஒப்புக்கொண்ட பல்வேறு பணிகளை இது வரை செய்யவில்லை என்பது தொடர் குற்றச் சாட்டாக உள்ளது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் கடந்த 2 மாதமாக மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வீட்டில் முடங்கியுள்ள சூழலில் இந்த நிறுவனம் இங்குள்ள கொத்தட்டை, அரியகோஷ்டி, வில்லியநல்லூர் ஆகிய மூன்று ஊராட்சி மக்களுக்கு உதவுவது அவ சியமாகும். ஆனால் இந்நிறுவனம் இதுவரை அத்தகைய உதவிகள் ஏதும் செய்யவில்லை. எனவே தாங்கள் தலையிட்டு அந்த நிறு வனத்தின் மூலம் மேற்கண்ட மூன்று ஊராட்சி கள் மட்டுமல்லாமல், சுற்றியுள்ள ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நிறுவனம் மக்களுக்கு நிவரணம் வழங்கவில்லை எனில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் மக்களை திரட்டி நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அந்த மனுவில் கூறப் பட்டுள்ளது.