tamilnadu

காகித பைகள், பாக்குமட்டை தட்டு தயாரிக்க பயிற்சி

சென்னை,ஏப்.24-மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் எம்.எஸ்.எம்.இ. தொழில்மேம்பாட்டு வளர்ச்சி நிறுவனத்தின் கோவை விரிவாக்க மையத்தின் சார்பில் இரு திறன்மேம்பாட்டு பயிற்சிகள் சென்னையில் அளிக்கப்படவுள்ளன.ஏப்.29 ஆம் தேதி முதல் மே 3 ஆம் தேதி வரை இது நடைபெறும். சுற்றுச்சூழலை பாதிக்காத தினசரி பயன்படுத்தும் பொருட்களான காகித பைகள், காகிதம், மற்றும் பாக்கு மட்டை தட்டுகள், டிஷ்ஷூபேப்பர், அலுமினியம் பாயிலை கொண்டு உருவாக்கப்படும் பலவிதமான பொருட்களுடன் மிகக்குறைந்த முதலீட்டில் குறுந்தொழிலாக செய்யப்படும் வாஷிங் பவுடர், டிஷ்வாஷ் லிக்குய்ட், அகர்பத்தி, மெழுகுவர்த்தி, பினாயில்,கற்பூரம் ஆகியவற்றை தயாரிக்க செய்முறை பயிற்சி அளிக்கப்படும்.தொழில்நுட்ப ஆலோசனைகள், உற்பத்திக்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்கள் வாங்கவும் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்யவும் தரக்கட்டுப்பாடு போன்ற விவரங்கள் விளக்கப்படும். மேலும் சுய தொழில் தொடங்குவதற்கு தக்க ஆலோசனைகள், திட்டஅறிக்கை தயார் செய்தல், அரசின் சலுகைகள், வங்கிகளின்கடன் திட்டங்கள் குறித்த விவரங்களும் இந்த பயிற்சியின் போது தெரிவிக்கப்படும். 18 வயது நிரம்பிய ஆண், பெண்இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 955195 0555.

;