நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறப்பு
வேலூர், ஜூலை 3- வேலூர் மாவட்டத்தில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் தலா ரூ.120 லட்சம் மதிப்பில் 2 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தலா ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 5 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாழன்று (ஜூலை 3)திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் வே. ரா. சுப்புலட்சுமி, காட்பாடி கிளித்தான்பட்டரையில் உள்ள நலவாழ்வு மையத்தில் குத்துவிளக்கு ஏற்றிவைத்தார். பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் து.மு.கதிர் ஆனந்த், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணை மேயர் மா.சுனில்குமார், 1 வது மண்டலக்குழுத்தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.பரணிதரன், மாநகர நல அலுவலர் மரு.பிரதாப்குமார், மாமன்ற உறுப்பினர் ம.சித்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.