tamilnadu

img

ஒக்கியம் மடுவு மேம்பால விரிவாக்கப்பணி மெட்ரோ மேலாண்மை இயக்குநர் ஆய்வு

ஒக்கியம்  மடுவு  மேம்பால  விரிவாக்கப்பணி  மெட்ரோ மேலாண்மை இயக்குநர் ஆய்வு

சென்னை, செப். 2- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதி வெள்ளப் பாதிப்புகளைத் தாங்கும் வகை யில் அதன் நீர்வழிப் பாதைகளை மேம்படுத் தவும், ஒக்கியம் மடுவு பாலத்தின் விரிவாக் கப் பணிகளையும் சீராக மேற்கொண்டு வரு கிறது. ஒக்கியம் மடுவு நீர்வழிப் பாதையில் நடைபெற்று வரும் பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் ஆய்வு செய்தார். பின்னர் அவர் இதுகுறித்து கூறுகையில், ஒக்கியம் மடுவு நீர்வழிப் பாதை திட்ட மிடப்பட்ட காலத்திற்கு முன்பே முடிக்கப் பட்டு, பருவமழைக்கு தயாராக இருப்பதை உறுதி செய்ய நாங்கள் இரவு பகலாக பணி யாற்றி வருகிறோம். தற்போதுள்ள ஒக்கியம் மடுவின் நீர் வழிப் பாதையை அடித்தள நிலை  வரை சரி செய்யும் பணியில் குழு கவனம் செலுத்தி வருகிறது. இந்தப் பணிகள் முடிந்த தும், இந்த பாலம் நீரின் ஓட்டத்தை குறிப்பிட த்தக்க வகையில் மேம்படுத்தும். மேலும், அருகில் உள்ள பகுதிகளில் வெள்ள அபா யத்தைக் குறைத்து, பள்ளிக்கரணை மற்றும்  அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள பாதிப்புகளில் இருந்து தீர்வை அளிக்கும் என்றார். திட்ட இயக்கு நர் தி.அர்ச்சுனன், பொது மேலாளர் (வழித் தடம்) சி.செல்வம் ஆகியோர் உடன் இருந்த னர்.