சிறுபான்மை மக்களுக்கு பட்டா வழங்க அதிகாரிகள் உறுதி
திருவண்ணாமலை, ஆக.26- திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் வசிக்கும் சிறுபான்மை மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி, கடந்த 2022 ஆம் ஆண்டு மனு கொடுக்கும் இயக்கம் நடத்தப்பட்டது. தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழுவின் சார்பாக நடை பெற்ற இந்த நிகழ்வில், 185 மனுக்கள் கொடுக் கப்பட்டது. அதில் முதல் தவணையாக செங்க ட்டாண்குண்டில் எனும் கிராமத்தைச் சேர்ந்த 15 நபர்களுக்கு வீட்டுமனைக்கான உத்தரவு, செய்யார் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி 2025-ல் வழங்கப்பட்டது. ஆனால் இந்நாள்வரை, பயனாளிகளுக்கு ஆன்லைன் பட்டாவாக மாற்றித் தர வில்லை. கொடுக்கப்பட்ட இடத்தை அளவீடு செய்து அடையாளம் காட்டவும் இல்லை. எனவே பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட பட்டாவைப் பதிவேற்றம் செய்து தர வேண்டும் என திங்களன்று (ஆக. 25) தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாவட்டத் தலைவர் யாசர் அராபத், மாவட்டச் செயலாளர் அப்துல் காதர், மாவட்டக் குழு உறுப்பினர் ஷேக் இஸ்மாயில் ஷரீஃப் ஆகியோர் பொது மக்களுடன் செய்யார் கோட்டாட்சியர் அலு வலகத்திற்குச் சென்று முற்றுகையிட்டு, கோட்டாட்சியரை நேரில் சந்தித்து மனுக் களை அளித்தனர். கோட்டாட்சியர், பய னாளிகளுக்கு வழங்கப்பட்ட இடத்திற்கு உடனடியாக ஆன்லைன் பட்டா வழங்க வும், அளவீடு செய்து எல்லைகள் குறிக்க வும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரி வித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த, தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழு நிர்வாகி கள் பேசியபோது, பட்டாவை எதிர்பார்த்து சிறுபான்மை இன மக்கள் நீண்ட காலம் காத்திருக்கின்றனர். எனவே ஒரு மாத காலத்திற்குள் பட்டாவைப் பதிவேற்றம் செய்யாவிட்டால், கோட்டாட்சியர் அலு வலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.