சென்னை:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 23ஆம் தேதி முதல் வழங்கப்படுமென அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி தேர்வுத்துறை உதவி இயக்குநர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “பத்தாம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சடிக்கப்பட்டு வருகிறது. அட்டவணை மதிப்பெண் பதிவேடுகள் கல்வி மாவட்டம் வாரியாகவும், தேர்வு மையம், பள்ளி வாரியாக அச்சிடப்பட்டுள்ளது.அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் இருந்து அசல் மதிப்பெண் சான்றிதழ்களை 21ஆம் தேதி மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர்கள் 22ஆம் தேதி பள்ளியின் தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு 23ஆம் தேதி காலை 10 மணி முதல் மதிப்பெண் சான்றிதழ்களை வழங்க வேண்டும்” என அதில் கூறியுள்ளார்.