சென்னை, ஆக.4- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதிக்குழு உறுப்பினரும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட பொருளாளருமான உஷா-வின் தந்தை குப்புசாமி (வயது 75), செவ்வாயன்று (ஆக.4) காலமானார். சோழிங்கநல்லூர், கல்லுகுட்டையில் உள்ள இல்லத்தில் வைக்கப் பட்டிருந்த உடலுக்கு கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, எம். தாமு உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி னர். கல்லுகுட்டை மயானத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.