tamilnadu

காட்டுப்பள்ளியில் வடமாநில தொழிலாளர்கள் போராட்டம்

காட்டுப்பள்ளியில் வடமாநில  தொழிலாளர்கள் போராட்டம்

மீஞ்சூர், செப்.2 திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர், காட்டுப்  ள்ளி அருகே உள்ள எல்&டி கப்பல் கட்டும் தளத்தில் உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளியான அமரேஷ் பிரசாத் பணிபுரிந்து வந்துள்ளார்.  இவர் தொழிலாளர்கள் குடியிருப்பு வளா கத்தில் உள்ள கட்டிடத்தின் மாடியிலி ருந்து எதிர்பாராத விதமாக விழுந்து உயிரி ழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோ தனைக்காக சென்னை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அமரேஷ் பிரசாத்தின் மரணத்திற்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், அவரது குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, ஆயிரக்கணக்கான வட மாநிலத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அப்போது காவல்துறையுடன் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  இதையடுத்து, போலீசார் கூட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் தொழிலாளர்களை விரட்டி அடித்தனர். வன்முறையில் ஈடுபட்ட 55க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதனிடையே உயிரிழந்த தொழி லாளியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதாகவும், உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்லும் செலவை ஏற்றுக்கொள்வதாகவும் ஒப்பந்த நிறுவனம் அறிவித்துள்ளது.