tamilnadu

img

வடசென்னை கூட்டமைப்பு நிர்வாகிகள் திருமா சந்திப்பு

வடசென்னை கூட்டமைப்பு நிர்வாகிகள் திருமா சந்திப்பு

வடசென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் டி.கே.சண்முகம், செயலாளர் ஆர்.ஜெயராமன் ஆகியோர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை சந்தித்து வடசென்னையை விஷ நகரமாக்கும் எரிஉலை திட்டத்தை தடுத்து நிறுத்தி, பசுமை சென்னை முன்னெடுப்பு மாற்று திட்டத்தை அமலாக்க, வடசென்னைக்கு என்று தனி சுற்றுச்சூழல் கொள்கையை உருவாக்க ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொண்டனர். பொருளாளர் ஆர்.பொன்னுசாமி, நிர்வாகிகள் டெய்சி மணியம்மை, எஸ்.ஏ.வெற்றிராஜன், ஆர்.அருண்குமார், பி.அருண்குமார், ஏ.துரைராஜ், நிரஞ்சன், பட்நாயக், ஆ.வெ.ஜெயகிருஷ்ணா, செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.