ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்படுவதை தவிர்க்க, விதிகளை திருத்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் அரசாணை படி, ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்படமாட்டார்கள். குற்றச்சாட்டுக்கு உள்ளான அரசு ஊழியர்கள் உரிய நாளில் ஓய்வுபெற அனுமதிக்கப்படுவார்கள்; குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை முடிவடைந்தபிறகே பணப் பலன்களைப் பெற முடியும்.
இதுவரை குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை ஓய்வுபெறும் நாளில் இடைநீக்கம் செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டு வந்ததாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.