tamilnadu

செய்தித் துளிகள்

சென்னையில் 567 பேருக்கு தொற்று

சென்னையில் மேலும் 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னையில் கொரோனா தொற்று  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 795ஆக அதிகரித்துள்ளது. வடமாவட்டங்களை பொருத்தவரை, செங்கல்பட்டில் 34,  திருவள்ளூரில் 42, கள்ளக்குறிச்சி 1, காஞ்சிபுரம் 13, ராணிப்பேட்டை 4,  திருப்பத்தூர் 1, திருவண்ணாமலை 3, வேலுர் 1, விழுப்புரம் 4 என  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முதலில் நெகட்டிவ் ஆகி பின் வீட்டிற்கு சென்ற 25 பேருக்கு கொரோனா  வந்திருப்பது புதிய சவாலாக உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர்  விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை: எந்த வார்டில் அதிகம்

சென்னையில் அதிக தொற்று கண்டறியப்பட்ட வார்டுகளின் பட்டி யலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில்  அதிகப்படியாக கோயம்பேட்டில் 427 தொற்றுகள் கண்டறியப் பட்டுள்ளது. சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 31 வார்டுகளில் கடந்த 3 நாட்களாக புதிதாக தொற்றுள்ளவர்கள் கண்டறியப்படவில்லை. 136 வார்டுகளில் 10க்கும் குறைவானவர்களுக்கே தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, சென்னையை பொறுவதவரை 167 வார்டுகளில் மிக குறைந்த அளவிலேயே தொற்று பரவல் இருந்து வருகிறது. எஞ்சிய 33 வார்டுகளில் மட்டுமே தொற்று அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 77, 58, 59, 52, 53, 72, 56, 57, 50, 93, 55, 73, 48, 61, 76, 38, 97, 54, 74, 60, 36,  62, 40, 43 உள்ளிட்ட 33 வார்டுகளில் 50க்கும் அதிகமானோருக்கு தொற்று பாதிக்கப்பட்டோர் உள்ளனர். சென்னையில் இதுவரை மொத்தம் கண்டறியப்பட்ட தொற்று உள்ளவர்களில் 50 விழுக்காட்டினர் இந்த 33 வார்டுகளில் மட்டுமே உள்ளனர்.

பணிக்கு செல்லத் தேவையில்லை

மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலக பணி மேற்கொள்வதில் மே 31 வரை விலக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான 
அரசாணையை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சிகிச்சையில் 134 கர்ப்பிணிகள்

சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் கர்ப்பிணிகள் 134 பேருக்கு கொரோனா தொற்றுக்கான  சிகிச்சையளிக்கப்படுகிறது. ராயபுரம் ஆர்எஸ்ஆர்எம் , கஸ்தூர்பா காந்தி, எழும்பூர் தாய்-சேய் நல மருத்துவமனைகளில் 134 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

காஞ்சிபுரம்: 13 பேருக்கு தொற்று

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா வைரஸ்  தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்ட அளவில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மொத்தம் 236 ஆக உயர்ந்துள்ளது.

6 செவிலியர்களுக்கு கொரோனா

சென்னை ராயபுரம் மருத்துவமனையில் 6 செவிலியர்கள் மற்றும்  47 கர்ப்பிணிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஒரு பெண் மருத்துவர், 3 பயிற்சி மருத்துவர்கள் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.