எண்ணூரில் புதிய மருத்துவ மையம்
சென்னை, ஜூலை 10- இந்தியாவில் வேளாண் தீர்வுகளை அளிப்பதில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான கோரமண்டல் இண்டர்நேஷனல் நிறு வனம் தங்கள் ’கோரொ ஆரோக்யா’ திட்டத்தின்கீழ் எண்ணூரில் உள்ள மக்களுக்கு ஆரம்ப மற்றும் முன்தடுப்பு மருத்துவ சேவைகளை அளிக்கும் சமூக சுகாதார திட்டத்தை தொடங்கியுள்ளது. அப்பகுதியைச் சுற்றி யுள்ள மக்களுக்கு மருத்துவ சேவை அளிக்கும் நோக்கத்துடன் நடமாடும் மருத்துவ ஊர்தி தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவ வசதிகள் பொருத்தப்பட்ட வாகனம், இப்பகுதிகளுக்குச் சென்று தேவையான மருத்துவ சேவைகளை மக்களுக்கு வழங்கும். ஆவடி காவல் ஆணை யர் கே.சங்கர், கோரமண்டல் இண்டர்நேஷனல் நிறு வனத்தின் நிர்வாக இயக்கு நர் மற்றும் தலைமை செயல் அதிகாரி.எஸ்.சங்கர சுப்பிர மணியன் ஆகியோர் இந்த முன்முயற்சியை தொடங்கிவைத்தனர். கோரமண்டல் நிறு வனத்தின் மூத்த அதிகாரி களும், எண்ணூர் பகுதி யைச் சேர்ந்த உள்ளூர் பிர முகர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.