tamilnadu

“நீட்” விவகாரம்: காங். எம்எல்ஏக்கள் வெளியேற்றம்

சென்னை:
நீட் விவகாரம் தொடர்பான விவாதத்தில் ஏற்பட்ட அமளியால்  காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.தமிழக சட்டப்பேரவையில் செவ்வாயன்று கேள்வி நேரம் முடிந்ததும், நீட் விவகாரம் தொடர்பான விவாதத்தில் ஆளுங் கட்சி உறுப்பினர் இன்பதுரை உரையாற்றினார்.தமிழ்நாட்டில் நீட்தேர்வு கொண்டு வருவதற்கு முக்கிய காரணம்  முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் வழக்காடினார் என்று குற்றம் சுமத்தினார்.
பேரவைக்கு  சம்பந்தம் இல்லாத நபர் பற்றி விவாதிப்பது முறையற்றது எனவே அதை நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அது ஏற்கப்படவில்லை. இதனால் அவையின் மையப் பகுதிக்குச் சென்று பேரவைத் தலைவரிடம் முறையிட்டனர். அப்போதும் அவர்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை. தொடர்ந்து, கூச்சல் குழப்பம் நிலவியதால் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்றுமாறு பேரவைத் தலைவர் தனபால் உத்தரவிட்டார்.
இதனையடுத்து சபை காவலர்கள் காங்கிரஸ் எம்எல்ஏக்களை குண்டுக்கட் டாக வெளியேற்றினர்.