tamilnadu

வந்தவாசி அருகே பள்ளி மாணவி மர்ம மரணம்

வந்தவாசி அருகே பள்ளி மாணவி மர்ம மரணம்

திருவண்ணாமலை, செப்.10- திருவண்ணாமலை மாவட்டம், வந்த வாசி அடுத்த கீழ்கொடுங்காலூர் கிரா மத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் - தமிழ்செல்வி தம்பதி. இவர்களது மகள் விஜயலட்சுமி(15). அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்தார். கடந்த 5 ஆம் தேதி வீட்டில் இருந்த மாணவி விஜய லட்சுமி காணாமல் போனார்.  எங்கு தேடியும் கிடைக்காததால் அவரது தாயார் தமிழ்ச்செல்வி கீழ்கொடுங்காலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், செப்.8 அன்று கீழ்க்கொடுங்காலூர் அருகே உள்ள கீழ்பாக்கம் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் மாணவி விஜயலட்சுமி சடல மாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த கீழ்கொடுங்காலூர்  போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து, மாணவி மரணத்திற்கு  காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.