tamilnadu

6 நாட்களுக்கு மிதமான மழை: வானிலை ஆய்வு மையம்

சென்னை,டிச.28- தமிழ்நாட்டில் ஜனவரி 3 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; கிழக்கு திசை காற்றின்  வேக மாறுபாடு காரணமாக, தமிழ் நாட்டின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 30 ஆம் தேதி முதல் ஜனவரி 1 வரைக்கும் தென் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், வட தமிழ் நாட்டில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசா னது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜன.2 மற்றும் 3 தேதிகளில் ஓரிரு  இடங்களில் புதுவை மற்றும் காரைக் கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.