tamilnadu

img

சிதம்பரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நடமாடும் சிகிச்சை மையம்

சிதம்பரம், ஜூலை 2-  கடலூர், விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த சமுகமேம்பாட்டு திட்டம், இந்திய தொழுநோய் சேவை  மையம் சார்பில் சிதம்பரம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான நடமாடும் சிகிச்சை மையம் துவக்க விழா நடைபெற்றது. இந்திய தொழுநோய் சேவை  மைய திட்ட மேலாளர் செயல்முறை மருத்துவர் மணிவண்ணன் வர வேற்றார். புதுதில்லி டீனா மென்டீஸ்  அறிமுக உரையாற்றினார். இந்திய தொழு நோய் சேவை மைய முதன்மை இயக்குநர் மருத்துவர்  மேரி வர்கீஸ் தலைமையுரையாற்றி நடமாடும் சிகிச்சை மைய வாக னத்தை  துவக்கி வைத்தார். கடலூர்  மாவட்ட மருத்துவ பணிகள் துணை  இயக்குனர் சித்திரைச் செல்வி, சிதம்பரம் அரசு மருத்துவமனை முதன்மை குடிமை மருத்துவர் அலு வலர்  தமிழரசன், வட தொரசலூர்,  மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஹெலன் ராபர்ட், முதல்வர் டின்சன் தாமஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கடலூர் திட்ட மேலாளர் ஜெகநாதன் நன்றி கூறினார்.  சிதம்பரத்திலுள்ள இந்திய  தொழுநோய் சேவை மையத்திற்கு மாற்றுத் திறனாளிகள் மற்றும்  தொழுநோயால் பாதிக்கப்பட்ட வர்கள் குறித்து தகவல் கொடுத்தால் அவர்கள் இருக்கும் வீட்டுக்கே சென்று அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் செய்யப்படும். அவர்களுக்கு நகரப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு செல்வதற்கும் அவர்களை அழைத்துச் செல்லவும் இந்த வாக னத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

;