tamilnadu

எம்.எம். கோவில் பகுதி குடியிருப்புகளை குடிசைமாற்று வாரியத்திடம் ஒப்படைத்திடுக

அதிகாரிகளிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனு

சென்னை, ஜன. 3- எம்எம் கோவில் பகுதி யில் அப்புறப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ள குடியிருப்பு களை குடிசை மாற்று வாரி யத்திடம் ஒப்படைக்க வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மத்திய சென்னை  மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா, செயற்குழு உறுப்பி னர் ஆர்.முரளி. பகுதிச் செய லாளர் சீனிவாசன். பகுதிக்  குழு உறுப்பினர் உதய குமார், மாதர் சங்கத் தலை வர் நாகரத்தினம் மற்றும்  பொதுமக்கள் நேரடியாக  ஆரணியாறு வடிநிலைக்  கோட்ட செயற்பொறியா ளரை சந்தித்து மனு அளித்த னர். அந்த மனுவில் கூறி யிருப்பதாவது: சென்னை அமைந்தகரை அருகில் உள்ள எம்.எம்.  கோவில் தெருவில் வசிக்கும்  மக்களின் குடியிருப்பு என்பது தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தினால் கடந்த 1989ஆம் ஆண்டு  ஒதுக்கீடு செய்யப்பட்ட தாகும். இந்நிலையில் தங்க ளது ஆயுட்கால வருமானம் அனைத்தையும் தங்களது வீட்டினை கட்டுமானம் செய்திடவே அந்த மக்கள் செலவழித்துள்ளனர். கடந்த காலங்களில் கூவம்  ஆற்றினை ஆக்கிரமிப்பு செய்த பகுதிகளை அதிகாரி கள் அப்புறப்படுத்திய போதும் இவர்களது குடி யிருப்புகளுக்கு பாதிப்பு இல்லாமல் இருந்து வந்துள் ளது.

ஆனால் சமீப காலமாக அதிகாரிகள் இது பொதுப்  பணித்துறைக்கு சொந்த மான இடமென்றும் அவர்க ளது குடியிருப்புகளை அப் புறப்படுத்தப் போகிறோம் என்றும் கூறி வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் தங்களுக்கு என அரசு ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு குடிசைமாற்று வாரி யத்திற்கு செலுத்த வேண்டிய ஆதாரத் தொகையினை முழுமையாக செலுத்தி யுள்ளனர். அதன்பிறகு வீடு கட்டுமானம் செய்வதற்கான தடையின்மைச் சான்றிதழ் உட்பட அத்தனையும் பெற்றுள்ளனர். மேலும் தாங்  கள் பிரதானமாக அப்புறப் படுத்த வேண்டிய குடி யிருப்புகளை அப்புறப்ப டுத்தி கூவம் ஆற்றிற்கான கரைகட்டிய பிறகும் இந்த  குடியிருப்புகளை அப்புறப் படுத்துவதை தாங்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டு மென கேட்டுக் கொள்கி றோம். மேலும் 1989ஆம் ஆண்டு  தமிழக முதல்வரின் அறிவு றுத்தலால் வழங்கப்பட்ட இந்த குடியிருப்புகளுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் விற்பனை பத்திரம்  பெற்றிட தாங்கள் கருணை யுடன் இந்த மக்களின் வாழ்வாதாரத்தினையும், அவர்களது நியாயத்தினை யும் கருதி தங்களது பொறுப்  பில் உள்ள இந்த நிலத்தினை  குடிசை மாற்று வாரியத்திற்கு ஒதுக்கி இந்த மக்களின் வாழ்வாதாரத்தினை பாது காத்திடுமாறு அந்த மக்க ளின் சார்பாகவும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனு வில் கூறப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோரிக் கையை ஏற்று எம்.எம்.  கோவில் பகுதியில் அப்புறப்  படுத்துவதற்கு திட்ட மிட்டுள்ள குடியிருப்புகளை நேரில் ஆய்வு செய்து அதன டிப்படையில் பரிசீலிப்பதாக செயற்பொறியாளர் தெரி வித்தார் என ஜி.செல்வா கூறி னார்.

;