tamilnadu

img

திருப்பத்தூர் அருகே மினிவேன் கவிழ்ந்த விபத்து - உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவிப்பு 

மினிவேன் பள்ளத்தில் கவிழ்ந்து 7 பேர் உயிரிழந்த  நிலையில், மேலும் சிலர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர்நாடு அருகே செம்பரை பகுதியில் மினி வேன் கவிழ்ந்து  விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  7 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜவ்வாது மலை கிராமமான புலியூரிலிருந்து சேம்பரை கிராமத்தில் நடக்கும் திருவிழாவுக்கு சென்றபோது விபத்து நேர்ந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கள் செய்தியில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இதே விபத்தில் சுமார் 22 நபர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைகள் அளிக்கவும், மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா இரண்டு லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ஜம்பதாயிரமும் உடனடியாக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

;