tamilnadu

img

அமைச்சர்கள் 3 நாட்கள் சென்னையில் தங்கியிருக்க உத்தரவு....

சென்னை:
அதிமுக முதல்வர் வேட்பாளர் வருகிற 7 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றுசெயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதிமுக கட்சியின் முதல்வர்வேட்பாளரை அறிவிப்பதில் தொடர்ந்துஇழுபறி நீடிக்கிறது. வேட்பளரை அறிவிக்க இன்னும் 2 நாட்களே உள்ளது.

ஆனாலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே இன்னும் சமரசம்ஏற்படாமல், மோதல் போக்கே தொடர் கிறது.இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வருகிற 6 ஆம் தேதிசென்னை வர வேண்டும் என்று கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பதிவில் தகவல் வெளியானது.பின்னர் திடீரென கூட்டம் ரத்து செய்யப்பட்டதால், அந்த டுவிட்டர் பதிவு நீக்கப்பட்டுவிட்டது. இதனால் அதிமுகவில் உச்சக்கட்ட கு

அதிமுக முதல்வர் வேட்பாளர் இன்று(அக்.5) குறித்து சென்னையில் அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.இதையடுத்து 6 ஆம் தேதி முதல்வர்வேட்பாளர் குறித்து இறுதி முடிவு எடுக்கப் பட்டு, 7ஆம் தேதி (புதன்) அதிமுக கட்சிதலைமை அலுவலகத்தில் அறிவிக்க அவர்திட்டமிட்டுள்ளார். தற்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரானபெரியகுளத்தில் உள்ளார். அவர் திங்களனறு (அக்.5) சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.5ஆம் தேதி முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தும் அமைச்சர்கள் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர்.திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், “வரும் 5, 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் (திங்கள், செவ்வாய், புதன்) அனைத்து அமைச்சர்களும் சென்னையில் இருக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி உத்தரவிட்டுள்ளதை உறுதி செய்தார்.