கடலூரில் மினிமாரத்தான் ஓட்டம்
கடலூர், அக்.8- மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பாக மினி மாரத்தான் ஓட்டம் கடலூர் மஞ்சகுப்பம் மாநகராட்சி பள்ளி அருகில் நடைபெற்றது. கடலூர் காவல் துணை கண்காணிப்பா ளர் ரூபன் குமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.மாவட்டஎய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகின் மேற்பார்வையாளர் கதிரவன் வரவேற்றார். திட்ட மேலாளர் ஆர்.செல்வம் நோக்க உரையாற்றினார். சுகாதார அலுவலர் எஸ். பொற்கொடி, இணை இயக்குநர் பி. மணிமேகலை ஆகியோர் முன்னிலை வைத்தனர். இந்த மினி மாரத்தான் ஓட்டம் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரைவரை சென்றது. முதல் 6 நபர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக அனைவரும் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
