பெண்களுக்கு எம்ஜிஎம் இலவச முழு உடல் பரிசோதனை
சென்னை சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர், மருத்துவமனையில் “நம்ம ஹெல்த்” அட்டை என்ற திட்டத்தை காவல்துறையின் அண்ணாநகர் சரக துணை ஆணையர் டாக்டர் பூக்கியா ஸ்நேகா பிரியா திங்களன்று (ஜூலை 14) தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், முதல்கட்டமாக இந்த திட்டத்தை சுற்றியுள்ள பகுதி பெண்களுக்கு மருத்துவமனை துவக்கினாலும் படிப்படியாக சென்னையில் உள்ள இதர பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த அட்டையின் கீழ் மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பெண்கள் ஆண்டுக்கு ஒருமுறை இலவசமாக உடல் பரிசோதனை செய்து கொள்ளலாம். வெளி நோயாளிகளுக்கான மருத்துவ ஆலோசனை கட்டணங்கள், நோயறிதலுக்கான பரிசோதனைகள், மருந்தக பில் மற்றும் உயர்தர மருத்துவ பரிசோதனைத் திட்டங்களின் தொகுப்பு மீது குறிப்பிட்ட விழுக்காடு தள்ளுபடி கிடைக்கும்.
காப்பீடு வசதி இல்லாத நோயாளிகளுக்கு குறைந்த கட்டணத்தில் அறை வாடகை மற்றும் காப்பீடு வசதி உள்ளவர்களுக்கு உடனடியாக அறை உள்ளிட்ட சேவைகள் இதில் அடங்கும் என்று மருத்துவமனையின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் பிரசாந்த் ராஜகோபாலன் கூறினார். முன்னதாக இலவச ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.