மெட்ரோ ரயில் வேலை வாய்ப்பு: போலி அறிவிப்புகளை நம்பாதீர்கள்!
சென்னை, செப். 26- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் நிறுவனத்தின் இணையதளம் www.chennaimetrorail.org/careers மற்றும் தமிழ், ஆங்கில நாளிதழ்களில் மட்டுமே வெளியிடப்படும் என மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் வெளிவரும் வேலை வாய்ப்பு அறிவிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. பணியாளர் தேர்வு பணி எந்த தனிமனிதருக்கும் வழங்கப்படவில்லை என்றும் நிறுவனம் தெரிவித்தது.ரெடிப்மெயில், யாகூ ,ஜிமெயில் போன்ற மின்னஞ்சல் முக வரிகள், மொபைல் எண்கள், வாட்ஸ்அப் அல்லது போலி யான CMRL லெட்டர் ஹெட் மூலம் வரும் தொடர்பு கள் அதிகாரப்பூர்வமற்றவை என அறிவித்தது. போலி யான வேலை வாய்ப்பு செய்திகளை பரப்புபவர்கள் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படு வதாகவும், அதிகாரப்பூர்வமற்ற தனியாரிடம் வேலை தேடி ஏற்படும் இழப்புகளுக்கு மெட்ரோ நிறு வனம் பொறுப்பேற்காது என்றும் தெரிவித்தது.
வாலிபருக்கு கடுங்காவல் சிறை
சென்னை, செப். 26– சென்னையில் ஆன்லைன் மூலம் அறிமுகமான 19 வயது இளம்பெண்ணிடம் ஆபாச வீடியோக்களை அனுப்பக்கூறி மிரட்டிய முகமது ஆசிப் என்ற வாலி பருக்கு நீதிமன்றம் 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் ரூ.50ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. அபராதம் கட்டத் தவறினால் மேலும் 6 மாத சிறைத்தண்டனையும், கூடுதலாக 2 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.5ஆயிரம் அபராதமும் வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின்பேரில் சைபர் கிரைம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66டி-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வேகவதி ஆற்றில் தூர்வாரும் பணி தொடக்கம்
காஞ்சிபுரம், செப்.26- வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக காஞ்சிபுரம் வேகவதி ஆற்றின் தூர்வாரும் பணியை சட்ட மன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் தொடங்கி வைத்தார். பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகளால் தூர்வாரப்படாமல் இருந்த ஆற்றில் ஆகாயத்தாமரை, நாணல்கள் வளர்ந்து நீரோட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் ஆண்டுதோறும் சுற்றுவட்டாரப் பகுதி களில் வெள்ளம் புகுந்து பொதுமக்கள் பாதிக்கப் பட்டனர். நீர்வளத்துறை உதவிப்பொறியாளர் மார்க்கண்டேயன் கூறியதாவது, “ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12 கி.மீ. தொலைவுக்கு 20 நாட்க ளில் தூர்வாரும் பணி முடிக்கப்படும். ஆற்றில் உள்ள தாமரை, நாணல்கள் அகற்றி வெள்ளம் தடை யின்றி செல்ல வழி ஏற்படுத்தப்படும்.” மாநக ராட்சி அதிகாரிகள், நீர்வளத்துறை அதிகாரி கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.