பராமரிப்பற்ற ரயில் நிலையமாக மாறும் மேல்மருவத்தூர் ரயில் நிலையம்
மேல்மருவத்தூர், செப்.16 செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகாவில் மேல்மருவத்தூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரயில்கள் நின்று செல்லும் முக்கிய இரயில் நிலைய மாகும்.இந்த ரயில் நிலையத்தை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள், சென்னைக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் என ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு கடந்த நான்கு மாதமாக சம்பளம் வழங்காததால் துப்புரவு பணி யாளர்கள் வேலையிலிருந்து நின்று விட்டனர்.இதனால் உரிய பரா மரிப்பின்றி மேல்மருவத்தூர் ரயில் நிலையம் குப்பைகாடாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் குரங்குகள் நடமாட்டம் உள்ளதால் குப்பை தொட்டிகளை கீழே தள்ளியும், அசுத்தம் செய்தும் வருகின்றது. இதனால் ரயில் நிலையம் குப்பை களுடன் காட்சியளிக்கிறது. எனவே தெற்கு ரயில்வேயில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த துப்புரவு பணியாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. மேலும் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் இருசக்கர வாக னத்திற்கு பார்க்கிங் வசதி அமைக்கப்படாததால் வேலைக்கு செல்வோர் ரயில் நிலையத்தில் திறந்த வெளியில் பார்க்கிங் செய்து விட்டு செல்வதால் இருசக்கர வாக னங்கள் திருடப்படுவது அதிகரித்து வருகின்றது. இதுகுறித்து புகார் அளித்தாலும் எந்தவித நடவடிக்கை யும் எடுப்பதில்லை. அதே போன்று மேல்மருவத்தூர் சோத்துப்பாக்கம் LC 74 ரயில்வே கேட் மேம்பாலப்பணி பிரதமர் மோடியால் அம்ரித் பாரத் திட்டத்தில் 31 கோடியே 87 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்தாண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் வரை ஆரம்ப கட்ட பணிகள் கூட துவக்கப்படவில்லை. அனைத்து ரயில்களும் மேல் மருவத்துதூர் ரயில் நிலையத்தில் நின்று சென்றிடவும் மின்சார ரயிலை மேல்மருவத்தூர் வரை நீட்டிப்பு செய்திட வேண்டுமென்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக கையெழுத்து இயக்கம் நடத்தி ரயில்வே நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டது.
