பெண்கள் மீதான வன்முறைகளை தடுக்க மாதர் சங்கம் வலியுறுத்தல்
விழுப்புரம், ஆக. 4- பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்முறைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்த வேண்டும் என்று மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. வீடு இல்லாதவர்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும், 100 நாள் வேலைக்கு வேலையும் சட்டக்கூலி முறையாக வழங்க வேண்டும், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான நடக்கும் பாலியல் வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர். இந்த மாநாட்டில் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் எஸ்.கீதா, மாவட்டச் செயலாளர் இலக்கிய பாரதி, மாவட்டப் பொருளாளர் சித்ரா ஆகியோர் கலந்து உரையாற்றினர். நிர்வாகிகள் தேர்வு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மயிலம் ஒன்றிய மாநாட்டில் 9 பேர் கொண்ட ஒன்றிய குழு தேர்வு செய்யப்பட்டது. தலைவராக டி.ஜெயஸ்ரீ, செயலாளராக தைரியலட்சுமி, பொருளாளராக மாலதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.