tamilnadu

img

மாதர் சங்க கடலூர் மாவட்ட மாநாடு தொடங்கியது

மாதர் சங்க கடலூர் மாவட்ட மாநாடு தொடங்கியது

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 17-வது மாவட்ட இரண்டு நாள் மாநாடு சனிக்கிழமை(செப்.6)  பேரணி மற்றும் பொதுக் கூட்டத்துடன் துவங்கியது. காட்டுமன்னார்குடி மேட்டு தைக்கால் பள்ளிவாசல் பகுதியில்  இருந்து புறப்பட்ட வெண்கொடி ஊர்வலம் கச்சேரி தெரு, கடை வீதி, பேருந்து நிலையம் வழியாக பொதுக்கூட்டம் நடைபெற்ற சீரணி அரங்கம் வந்தடைந்தது. சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராதிகா கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  பொதுக் கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் பி.தேன்மொழி தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் ஏ.ராதிகா, மாநிலப் பொருளாளர் வி.பிரமிளா, மாநிலச் செயலாளர் பாக்கியலட்சுமி ஆகியோர் உரையாற்றினர். மாநில செயற்குழு உறுப்பினர் வி. மேரி, மாவட்டத் தலைவர் வி.மல்லிகா, செயலாளர் பி.மாதவி, நிர்வாகிகள்  பி.முத்துலட்சுமி, எஸ்.ரேவதி, கே.அன்புச்செல்வி, எம்.ஜெயசித்ரா, எஸ். சாந்தகுமாரி உட்பட பலர் பேசினர். பிரதிநிதிகள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை (செப்.7) நடைபெறுகிறது.