tamilnadu

காந்திகிராம பல்கலை.யில் மார்ச் 9 - பட்டமளிப்பு விழா

சின்னாளப்பட்டி, மார்ச் 6- திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் 37-ஆவது பட்டமளிப்பு விழா மார்ச் 9 அன்று நடைபெற உள்ளது.

2020-21, 2021-22, 2022-2023 கல்வியாண்டுக்கான 37-ஆவது பட்டமளிப்பு விழா மார்ச் 9ஆம் தேதி பல்கலைக்கழக பல்நோக்கு அரங்கில் நடைபெற உள்ளது. சம்பந்தப்பட்ட கல்வி ஆண்டுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் பல்கலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

பல்கலைக்கழக வேந்தர் அண்ணாமலை தலைமையில் 4 201 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்படுகின்றன. 

விழாவில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பங்கேற்க உள்ளார் என்று பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.