tamilnadu

img

பத்தாம் வகுப்பு மாணவியை எரித்துக்கொன்ற அதிமுகவினர் கைது 

விழுப்புரம் அருகே முன்பகை காரணமாக பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட, பத்தாம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் தொடர்புடைய அதிமுகவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகிலுள்ள சிறுமதுரை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால் இவரது மகள் ஜெயஸ்ரீ  பத்தாம் வகுப்பு படித்து வந்தார். 
இந்நிலையில் மாணவியின் தந்தையுடன் இருந்த முன்விரோதம் காரணமாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் கணவர் முருகன் மற்றும் கலியபெருமாள் இருவரும்  ஜெயபாலின் மகள் மீது நேற்று பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.  இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் 95 சதவிகித  தீ காயத்தால் பாதிக்கப்பட்ட மாணவியை விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து மாணவி ஜெயஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய முருகன் மற்றும் கலிய பெருமாள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.